/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு ரூ.1.72 லட்சம், அரை பவுன் காணிக்கை

ADDED : மே 13, 2025 02:11 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் திறந்து, நேற்று எண்ணப்பட்டது. இதில், 1.72 லட்சம் ரூபாய் பணம்,
அரை பவுன் தங்க நாணயம்
காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா, கடந்த ஏப்., மாதம் தொடங்கி, மே, 10ல் நிறைவடைந்தது. பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை முடிந்த பின் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணுவது வழக்கம். இந்தாண்டு பண்டிகை முடிந்ததால், நேற்று காலை, விழாக்குழு தலைவர் அன்பழகன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் செந்தில்ராஜான் உண்டியலை திறந்தார்.
தன்னார்வலர்கள், 10க்கும் மேற்பட்டோர் காணிக்கைகளை எண்ண தொடங்கினர். ரொக்கமாக, 1.72 லட்சம் ரூபாயும், அரை பவுன் தங்க காசு, 15 கிராம்
வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்தாண்டு, 1.53 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்த நிலையில், இந்தாண்டு, 19,000 ரூபாய் காணிக்கை கூடுதலாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.