/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருமணம் செய்த காதல் ஜோடி நாமக்கல் எஸ்.பி., ஆபீசில் தஞ்சம்
/
திருமணம் செய்த காதல் ஜோடி நாமக்கல் எஸ்.பி., ஆபீசில் தஞ்சம்
திருமணம் செய்த காதல் ஜோடி நாமக்கல் எஸ்.பி., ஆபீசில் தஞ்சம்
திருமணம் செய்த காதல் ஜோடி நாமக்கல் எஸ்.பி., ஆபீசில் தஞ்சம்
ADDED : செப் 07, 2025 12:44 AM
நாமக்கல், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜெயசந்தியா, 19; அதே மாவட்டம், வணியம்பட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம், 20; இருவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள், திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து, ஜெயசந்தியா கூறியதாவது:
நாங்கள் இருவரும், இரண்டு ஆண்டாக காதலித்து வந்தோம். இதற்கு, இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என் தந்தை செந்தில்குமார், தி.மு.க.,வில் உறுப்பினராக இருப்பதால், இருவரையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். அதனால், வீட்டை விட்டு வெளியேறி, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள சிவன் கோவிலில், கடந்த ஆக., 26ல், காதல் திருமணம் செய்து கொண்டோம். தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தோம். எங்கள் மனுவை போலீசார் உரிய முறையில் விசாரிக்காமல், விருதுநகர் எஸ்.பி., அலுவலகம் சென்று மனு கொடுக்கும்படி அலட்சியமாக தெரிவித்தனர். தொடர்ந்து, வேண்டா வெறுப்பாக மனுவை பெற்றுக்கொண்டு எங்களை அனுப்பினர். உரிய பாதுகாப்பு போலீசார் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.