/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம், ப.வேலுார், தி.கோட்டில் மருத்துவ முகாம்; முன்னாள் படைவீரர் பங்கேற்று பயன்பெற அழைப்பு

ADDED : மார் 05, 2025 06:24 AM
நாமக்கல்: 'மாவட்டத்தில், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு தாலுகாவில் நடக்கும் மருத்துவ முகாமில், முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு, தமிழக முன்னாள் படைவீரர் நல நிதியின் கீழ், புற்றுநோய், பக்கவாதம், ஊனமுற்றோர், தொழுநோய், குருட்டுத்தன்மை, குள்ளநோய் போன்ற நீண்ட கால நோய்களுக்கு, முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து நிதியுதவி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட நிதியுதவி தொடர்பாக, முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால், நலப்பணிகள் இணை இயக்குனர் மூலம் மருத்துவ முகாம் நடக்கிறது.
இந்த முகாம், காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. நாளை, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நடக்கும் மருத்துவ முகாமில், ராசிபுரம், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை தாலுகாவை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் கலந்துகொள்ளலாம். வரும், 11ல், ப.வேலுார் அரசு மருத்துவமனையில் நடக்கும் மருத்துவ முகாமில், நாமக்கல், மோகனுார், ப.வேலுார் தாலுகாவை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் கலந்துகொள்ளலாம். வரும், 14ல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நடக்கும் முகாமில், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.