/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கூட்டம்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கூட்டம்
ADDED : ஆக 31, 2025 04:19 AM
நாமக்கல்:புதிய
பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான, வட்டார அளவிலான
கூட்டம் மோகனுார், பரமத்தி, கபிலர்மலை ஒன்றியங்களில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இணை
இயக்குனர் பொன்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
பழைய தலைமுறை
மக்களின் அனுபவ அறிவை, இளைய தலைமுறையினருக்கு கடத்த வேண்டிய
அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் தன்னார்வலர்கள்
தெரிந்துகொள்ள வேண்டும். நுால்கள் வாசிப்பு மிகவும்
முக்கியமானதாகும். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தாண்டு
நவ., மாதத்திற்குள், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற
மாவட்டமாக அறிவிக்க முன்னெடுப்புகள் மேற்கொண்டு செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்பாடுகளை மாவட்ட பள்ளி ஆய்வாளர் பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிந்துஜா, கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.