/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வணிக நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற விளக்க கூட்டம்
/
வணிக நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற விளக்க கூட்டம்
ADDED : பிப் 16, 2025 03:50 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர் பகுதியில் செயல்படும் வணிக நிறுவ-னங்கள் அனைத்தும், நகராட்சி தொழில் உரிமம் பெறுவது தொடர்பாக, வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மற்றும் அதன் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம், நக-ராட்சி நகர்மன்ற கூட்டரங்கில் நடந்தது.
சேர்மன் நளினி சுரேஷ்-பாபு தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அருள் பேசு-கையில், ''நகராட்சி சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் ஆகியவற்றின் தொகையை நகராட்சிக்கு உடனடியாக செலுத்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்-தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. சட்ட விதி-களுக்கு உட்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதற்கு வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம், தொழில் உரிமம் ஏன் பெற வேண்டும் என்பது குறித்தும், வியாபாரிகளின் கேள்வி-களுக்கு உரிய விளக்கமளித்தும் பேசினார். இறுதியில், 'நெகிழி இல்லா தமிழகம்' உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. திருச்-செங்கோடு நகை வியாபாரிகள் சங்க தலைவர் லோகநாதன், செய-லாளர் வரதராஜன், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லப்பன், மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பால சுப்பிரமணியம், திருச்செங்கோடு மளிகை வர்த்தக சங்க தலைவர் பெரியசாமி, வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.

