/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொ.ம.தே.க., வேட்பாளர் தி.மு.க., - மா.செ.,வுடன் சந்திப்பு
/
கொ.ம.தே.க., வேட்பாளர் தி.மு.க., - மா.செ.,வுடன் சந்திப்பு
கொ.ம.தே.க., வேட்பாளர் தி.மு.க., - மா.செ.,வுடன் சந்திப்பு
கொ.ம.தே.க., வேட்பாளர் தி.மு.க., - மா.செ.,வுடன் சந்திப்பு
ADDED : மார் 20, 2024 02:05 AM
நாமக்கல்:-நாமக்கல்
லோக்சபா தொகுதி, கொ.ம.தே.க., வேட்பாளர் சூரியமூர்த்தி, நாமக்கல்
கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார், எம்.பி.,யை சந்தித்து
வாழ்த்து பெற்றார்.
தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க.,வுக்கு ஒரு
தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் லோக்சபா தொகுதியில் கடந்த, 2019
தேர்தலில், கொ.ம.தே.க., சார்பில் போட்டியிட்ட சின்ராஜ், 2.60 லட்சம்
ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த தேர்தலில்,
கொ.ம.தே.க., மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, நாமக்கல்
லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாமக்கல்
தொகுதியில், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில்
போட்டியிடுகிறார்.
அவர், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க.,
அலுவலகத்திற்கு வருகை தந்து, மாவட்ட தி.மு.க., செயலாளரும், நாமக்கல்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார், எம்.பி.,யை
சந்தித்து வாழ்த்து பெற்றார். கொ.ம.தே.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

