sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரத்தில் இன்று சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை

/

ராசிபுரத்தில் இன்று சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை

ராசிபுரத்தில் இன்று சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை

ராசிபுரத்தில் இன்று சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை


ADDED : ஜன 10, 2025 01:08 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம், சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்

களுக்கு 'சீடு' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் இத்திட்டம், சீர்மரபினர்களுக்கு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல், சிறப்பு காப்பீடு திட்டம் அளித்தல், வாழ்வாதாரங்களை எளிதாக்கும் சமூக நிறுவனங்களின் சிறிய

குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல், வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல் ஆகியவற்றை வழங்குகிறது.

மாநில அரசின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு, நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. சீர்மரபினர்கள் ஆதார் அட்டை, ஜாதி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம்

ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்

படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனுார், கொல்லிமலை ஆகிய தாசில்தார் அலுவலகங்களில், இன்று முகாம் (10ம் தேதி) நடக்கிறது. தகுதியானவர்கள் தேவையான சான்றுடன் நேரில் சென்று பயன்பெறலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us