/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2024 01:11 PM
நாமக்கல்: நாமக்கல் நகர, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 107 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மெயின் ரோடு மூன்று சிலை அருகே நடந்த விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நகர செயலருமான பாஸ்கர் தலைமை வகித்து, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக பூங்கா சாலை, திருச்சி சாலையில் செயல்படும் அம்மா உணவத்தில் பொதுமக்களுக்கு சிற்றுண்டி வழங்கினார். சட்டசபை தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மயில்சுதந்திரம், அவைத்தலைவர் விஜய்பாபு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வகுமார், நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க முன்னாள் தலைவர் மாணிக்கம், ஜெ.பேரவை இணை செயலர் கைலாசம், நரசிம்மன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
* எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோக்கலை, கொன்னையார், எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம், யூனியன் அலுவலகம், புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலர் சக்திவேல் தலைமையில், அம்மாபேரவை மாவட்ட செயலாளர் சந்திரசேகர் முன்னிலையில், பரமத்தி எம்.எல்.ஏ., சேகர், எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினார். கிழக்கு ஒன்றிய செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சுகிர்தாபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
* மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் பஸ் நிறுத்தத்தில் எம்.ஜி.ஆர்., உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்செங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி, மல்லசமுத்திரம் மேற்கு ஒன்றிய செயலர் ராஜன், ஒன்றியகுழு தலைவர் அலமேலு விஜயன், பருத்திப்பள்ளி
கூட்டுறவு கடன்சங்க தலைவர் குழந்தைவேல், ராமாபுரம் கூட்டுறவு கடன்சங்க தலைவர் கோபால், ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அருள்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
* குமாரபாளையத்தில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் கொண்டாடப்பட்டது. முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, அர்ச்சுனன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.