ADDED : ஜன 09, 2026 05:27 AM
திருச்செங்கோடு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், திருச்செங்-கோடு அடுத்துள்ள மோளியப்பள்ளி பால் சொசைட்டி முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வேலா-யுதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய், எருமை பால் லிட்ட-ருக்கு, 60 ரூபாய் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு தரமான கால்நடை தீவனம், 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி, சிறப்பு ஊதியம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க எலச்சிபாளையம் ஒன்றிய தலைவர் பெரிய-சாமி, செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பெரியசாமி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
