/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 வழித்தடத்தில் மினி பஸ் இயக்கம்
/
3 வழித்தடத்தில் மினி பஸ் இயக்கம்
ADDED : ஆக 03, 2025 12:48 AM
வெண்ணந்துார், தமிழகம் முழுவதும், சில தினங்களுக்கு முன் கிராம பகுதிகளில் பஸ் சேவையை அதிகரிக்கும் விதமாக மினி பஸ் சேவையை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், ராசிபுரம் அடுத்த வெண்ணந்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளைபிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாண்டில், கிராம பகுதிகளுக்கு, மூன்று மினி பஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார், மூன்று மினி பஸ் சேவையை ரிப்பன் வெட்டி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இரண்டு மினி பஸ்கள், ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து தொடங்கி வெண்ணந்துார், அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம் வழியாக சென்று, இறுதியாக குருசாமிபாளையம் சென்றடைகிறது. மற்றொரு மினி பஸ், ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து தொடங்கி, வெண்ணந்துார், மல்லுார் வழியாக பனமரத்துப்பட்டிசென்றடைகிறது. ஒன்றிய செயலாளர் துரைசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

