தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அனுமதியை மீறி மினி பஸ் இயக்கம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

அனுமதியை மீறி மினி பஸ் இயக்கம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

அனுமதியை மீறி மினி பஸ் இயக்கம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்


ADDED : ஜூலை 16, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:அனுமதியை மீறி மினி பஸ் இயக்குவதை கண்டித்து, நாமக்கல்லில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு, மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், நாமக்கல் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு, தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. இவை, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்,

போலீஸ் எஸ்.பி., அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வழியாக மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக சென்ற மினி பஸ்சின் குறுக்கே, ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி, அதன் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதுகுறித்து, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:- நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை, மூன்று முறை மட்டும் குறிப்பிட்ட தனியார் மினி பஸ் இயக்க அனுமதி உள்ளது. அதை மீறி, மினி பஸ் நாள் முழுவதும் இயக்கப்படுகிறது. ஒரு பர்மிட்டை வைத்து, மற்றொரு மினி பஸ் இயக்கப்படுகிறது. இதனால், ஷேர் ஆட்டோ இயக்கும் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படுகிறது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us