திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் ஆய்வு
திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூன் 16, 2026 04:01 AM
திருச்செங்கோடு; நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று, திருச்செங்கோடு சட்ட-சபை தொகுதிக்குட்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் மது-பாலன் முன்னிலை வகித்தார். தமிழக மருத்-துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்-வாழ்வு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் வழங்கல் வடிகால் வாரியம், வேளாண், நீர்வளம், நெடுஞ்-சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்ப-ணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, நிலுவையில் உள்ள பணி-களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட இயக்க மேலாண் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், ஆர்.டி.ஓ., லெனின், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகம்மாள், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
