sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அமைச்சு பணியாளர்கள்

/

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அமைச்சு பணியாளர்கள்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அமைச்சு பணியாளர்கள்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அமைச்சு பணியாளர்கள்


ADDED : மார் 31, 2025 03:06 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பனிரெண்டு ஆண்டுகளுக்கு பின், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றும், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தும், அமைச்சு பணியாளர்கள், நாமக்கல்லில் கூட்டம் நடத்தினர். அதில், தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்துள்ள, 2,000 பேர் அமைச்சு பணி-யாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

2012 முதல், 2025 வரை அவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட-வில்லை.இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், பணியிடம் வழங்-கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மார்ச், 21ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழகரசு, கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள அமைச்சு பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளில், 2 சதவீத அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியி-டங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.

முதல் கட்டமாக, 747 பணியிடங்கள் நிரப்பவும் அறிவுறுத்தப்பட்-டுள்ளது. 2,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அமைச்சு பணியாளர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், 12 ஆண்டுகளுக்கு பின், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றும், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சு பணியாளர்கள் பங்கேற்ற கூட்டம் நாமக்-கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜெயரத்தினகாந்தி தலைமை வகித்தார். இதில், ஆசிரியர் பணியிட வாய்ப்பை பெறும் அமைச்சு பணியாளர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்-துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us