ADDED : டிச 11, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மிக்சர்' லாரி கவிழ்ந்து விபத்து
பள்ளிப்பாளையம்,
பள்ளிப்பாளையம் அடுத்த கண்டிப்புதுாருக்கு, நேற்று மாலை, சிமென்ட் கலவை லாரி ஒன்று வந்தது. அதில், 5 டன் சிமென்ட் கலவை இருந்தது. கண்டிப்புதுார் பகுதியில் வளைவு சாலையில் திரும்பும்போது நிலை தடுமாறி கலவை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டீசல் டேங்க் சேதமடைந்து, டீசல் வெளியேறியது. பள்ளிப்பாளையம் போலீசார், வெப்படை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

