/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுத்தை மர்மச்சாவால் விசாரணை மக்களுக்கு எம்.எல்.ஏ., நம்பிக்கை
/
சிறுத்தை மர்மச்சாவால் விசாரணை மக்களுக்கு எம்.எல்.ஏ., நம்பிக்கை
சிறுத்தை மர்மச்சாவால் விசாரணை மக்களுக்கு எம்.எல்.ஏ., நம்பிக்கை
சிறுத்தை மர்மச்சாவால் விசாரணை மக்களுக்கு எம்.எல்.ஏ., நம்பிக்கை
ADDED : செப் 29, 2024 03:12 AM
மேட்டூர்: சிறுத்தை மர்மமாக இறந்த நிலையில் வனத்துறையினர், மக்க-ளிடம் விசாரித்தனர். தொடர்ந்து மேட்டூர் எம்.எல்.ஏ., அப்பகுதி மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி கரடு பகு-தியில் முகாமிட்ட சிறுத்தை, ஒரு மாதமாக அப்பகுதி விவசாய நிலம், தோட்டத்தில் புகுந்து, 15 ஆடுகள், 10 கோழிகளை பிடித்-துச்சென்றன.
சிறுத்தையை பிடிக்கக்கோரி, 3 முறை கிராம மக்கள், கொளத்துார் வன சோதனை சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் காலை, சிறுத்தை வெள்ளக்கரட்டூரில் உள்ள கரடு பகுதியில் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.
வனத்துறையினர் பரிசோதனைக்கு பின், அதே பகுதியில் தீ மூட்டி எரித்தனர். அன்றிரவு வனத்துறையினர், சிறுத்தையை கொன்றது யார் என அப்பகுதியை சேர்ந்த 4 பேரிடம் விசாரித்-தனர். அதேநேரம் சிறுத்தையை கொன்றது யார் என கேட்டு வனத்துறையினர் மிரட்டுவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
நேற்று புதுவேலமங்கலம், மணக்கல், குள்ளநரி மாரியம்மன் கோவிலில், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதா-சிவம் தலைமையில் கிராம மக்கள் கூடினர்.
அப்போது சதாசிவம், ''சிறுத்தை மர்மச்சாவு குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் பேசியுள்ளேன். அவர் விசாரித்து நட-வடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதுவரை மக்கள் அமைதி காக்க வேண்டும். வனத்துறையினர் விசாரித்தால் உடனே எனக்கு தகவல் தெரிவிக்கலாம். அப்போது நேரில் வந்து உதவுகிறேன்,'' என, நம்பிக்கை அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.