/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : மே 08, 2025 01:57 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டம், கொளத்துபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், தானத்தம்பட்டியில் முழு நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழாவிற்கு, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார்.
நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் சுரேஷ், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் சரவணன், சங்க பணியாளர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.