தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்: அமைச்சர் துவக்கம்

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்: அமைச்சர் துவக்கம்

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்: அமைச்சர் துவக்கம்


ADDED : பிப் 19, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, உழவரை தேடி வேளாண்மை திட்டத்தின் கீழ் நடந்த விவசாய கூட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு, 'உழவரை தேடி வேளாண்மை' என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனை, விழிப்புணர்வு வழங்கி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மண் மற்றும் நீரின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.இதன் தொடர்ச்சியாக, நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி கிராமத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் விவசாய கூட்டம் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். அவர், 'நடமாடும் மண் மற்றும் பாசன நீர் ஆய்வு முகாமை' கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தனியார் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவியருடன் கல்வி வளர்ச்சி குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

அப்போது, மாணவியர் விவசாய நிலங்களில் மண் மாதிரிகளை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். அதில், 'விவசாய நிலங்களில் மண் ஆய்விற்காக மண் மாதிரிகளை எடுக்கும்போது நிலத்தை ஜிக் ஜாக் வடிவ பகுதிகளாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக மாதிரி எடுக்க வேண்டும்.

பயிர் வகையை பொறுத்து மாதிரி எடுக்கும் ஆழம் மாறுபடும். நெல் மற்றும் சிறுதானியங்களுக்கு அரை அடி ஆழத்திலும், கரும்பு மற்றும் வாழைக்கு ஒரு அடி ஆழத்திலும் மண் எடுக்க வேண்டும் என, விளக்கினர். புதுப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us