sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு

/

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு


ADDED : ஜூலை 22, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், குரூப்-2, 2ஏ போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு இன்று துவங்குகிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நேரடியாக இன்று காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.

இத்தேர்வு, மண்டல அளவில், ஏழு மாவட்டங்கள் உள்ளடக்கி, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும் அசல் தேர்வைபோல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட உள்ளது. நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், 2024-25ல், வெளியான தேர்வு முடிவுகளில், குரூப்-4 தேர்வில், 12 பேர், சீருடை பணியாளர் போலீஸ் தேர்வில், 13 பேர், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2ஏ தேர்வில், 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களின் விபரத்தை, 04286--222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விபரத்தை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us