/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாநில பூப்பந்து போட்டிக்கு தேர்வு
/
மோகனுார் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாநில பூப்பந்து போட்டிக்கு தேர்வு
மோகனுார் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாநில பூப்பந்து போட்டிக்கு தேர்வு
மோகனுார் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாநில பூப்பந்து போட்டிக்கு தேர்வு
ADDED : அக் 23, 2024 01:42 AM
மோகனுார் அரசு மாதிரி மகளிர் பள்ளி
மாநில பூப்பந்து போட்டிக்கு தேர்வு
மோகனுார், அக். 23-
மாவட்ட அளவிலான, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான பூப்பந்து போட்டி, மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 8 வட்டங்களில் வட்ட அளவில் முதலிடம் பெற்ற, ஆறு அணிகள் பங்கேற்றன. அதில், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 2ம் இடம், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 3ம் இடம் பிடித்தன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். வெற்றி பெற்ற அணிகளுக்கு, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலக மேலாளர் சீனிவாசன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், பொறியாளர் முருகானந்தம் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வி, ராதிகா, பாரதி, தீபக், ஆசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.