/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் நகர், வாங்கல் பிரிவு சாலையில் ரூ.80 லட்சத்தில் ரவுண்டானா பணி துவக்கம்
/
மோகனுார் நகர், வாங்கல் பிரிவு சாலையில் ரூ.80 லட்சத்தில் ரவுண்டானா பணி துவக்கம்
மோகனுார் நகர், வாங்கல் பிரிவு சாலையில் ரூ.80 லட்சத்தில் ரவுண்டானா பணி துவக்கம்
மோகனுார் நகர், வாங்கல் பிரிவு சாலையில் ரூ.80 லட்சத்தில் ரவுண்டானா பணி துவக்கம்
ADDED : நவ 12, 2024 01:25 AM
நாமக்கல், நவ. 12-
மோகனுார் நகர், வாங்கல் சாலை பிரிவில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் - ராசிபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மோகனுார் - லத்துவாடி வரை உள்ள சாலையை இருவழிச்சாலையாக மாற்ற, 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இப்பணியின்போது, மோகனுார், பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, முக்கோண வடிவில், இரண்டு ரவுண்டானா அமைக்கப்பட்டது. அப்போதே இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, ஒரே ரவுண்டானாவாக அமைக்க வலியுறுத்தினர். ஆனால், கண்டுகொள்ளவில்லை. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதேபோல், மோகனுார் - வாங்கல் செல்லும் சாலையிலும், முக்கோண வடிவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அங்கும், இதே நிலை நீடித்தது.
இதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன் அவற்றை மாற்றியமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடப்பட்டது. இதையேற்று, மோகனுார் நகரில், பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், வாங்கல் சாலையிலும், புதிதாக இரண்டு ரவுண்டானா அமைக்க, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, முக்கோண வடிவ ரவுண்டானாவை இடித்து அகற்றிவிட்டு, புதிய ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கியது.