ADDED : ஜூன் 29, 2026 05:28 AM
ப.வேலுார்:ப.வேலுார்
டவுன் பஞ்.,ல் 18 வார்டுகள் உள்ளன. கோடை வெயில் கொளுத்தியதால், கொசு
உற்பத்தி குறைந்திருந்தது. கோடைகாலம் முடிந்த நிலையில், தற்போது
அவ்வப்போது மழை பெய்து வருவதால் மீண்டும் கொசு உற்பத்தி
அதிகரித்துள்ளது.
மேலும், மழைநீர் கால்வாய்களில் தேங்கியுள்ள
தண்ணீரில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் ப.வேலுார்
பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். கொசு மருந்து அடிக்க வேண்டும், என டவுன் பஞ்.,
நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும்
எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து,
டவுன் பஞ்., துப்புரவு மேற்பார்வையாளர்களிடம் கேட்டபோது,
'தற்போது கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் பழுதாகி உள்ளது. மேலும்,
ஆட்கள் பற்றாக்குறையால் கொசு மருந்து அடிப்பதில் தேக்கம்
ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள டவுன் பஞ்.,லிருந்து கொசு மருந்து
அடிக்கும் இயந்திரம் இரவல் வாங்கி, கொசு அடிக்கும் பணி வரும் வாரங்களில்
சரி செய்யப்படும்' என்றார்.
