ADDED : ஜூலை 08, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்:நாமக்கல்
மாவட்டத்தில், 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நடந்து
வருகிறது. கொல்லிமலையில், மொத்தம், 11,600 மாடுகளுக்கு கோமாரி நோய்
தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 5
குழுக்கள் அமைக்கப்பட்டது.இப்பணிகளை, கால்நடை பராமரிப்புத்துறை
தலைமை அலுவலக உதவி இயக்குனர் கல்பனா ஆய்வு செய்தார்.
அப்போது,
''இந்த, 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணியின்போது, விவசாயிகள்
அனைவரும் தங்களது மாடு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் கோமாரி
தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியை போடுவதன்
மூலம் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கோமாரி நோய்
தாக்குதலில் இருந்து மாடுகளை பாதுகாக்க முடியும்,'' என்றார்.
