/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உடல்தானம் ஆவணங்களை சமர்ப்பித்த தாய், மகன்
/
உடல்தானம் ஆவணங்களை சமர்ப்பித்த தாய், மகன்
ADDED : மே 30, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் :குமாரபாளையம் பகுதியில், ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம், உடல்தானம் செய்யும் ஆவணங்களை தாயும், மகனும் கொடுத்தனர்.
உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி, குமாரபாளையம் பகுதியில், மாவட்ட கலெக்டர் உமா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நாமக்கல் மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்சிக்காக உடல்தானம் செய்திட விருப்பம் தெரிவித்து, ஈரோடு தனலட்சுமி மற்றும் இவரின் மூத்த மகன் பார்த்த சாரதி ஆகியோர், சமூக ஆர்வலர் சித்ரா உடன் வந்து, அதற்கான ஒப்புதல் ஆவணங்களை, கலெக்டர் உமாவிடம் அளித்தனர். உடல்தானம் செய்ய முன்வந்த தாய், மகன் ஆகியோரை கலெக்டர் பாராட்டினார்.