ADDED : டிச 12, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தம்மநாயக்கர் மகன் பொம்மநாயக்கர், 43. இவர் தனது மனைவி கொண்டம்மாள், 34, மற்றும் 3 குழந்தைகளுடன் ராசிபுரம், குருசாமிபாளையம் அடுத்த நொச்சிகுத்திப்பாளையத்தில் தங்கி, தேங்காய் உரிக்கும் கூலி வேலைக்கு செல்கிறார்.
கொண்டம்மாள் கடந்த, 5 ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இரண்டு நாட்களாக முதுகு தண்டு வட வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மாலை, 4:00 மணிக்கு பொம்மநாயக்கர் பால் வாங்க வீட்டை விட்டு வெளியே சென்றபோது, கொண்டாம்மாள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

