/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எலச்சிபாளையத்தில் மாதர் சங்க மாநாடு
/
எலச்சிபாளையத்தில் மாதர் சங்க மாநாடு
ADDED : ஆக 11, 2025 06:14 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், நேற்று அனைத்திந்திய மாதர் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது. தலைவர் கவிதா தலைமை வகித்தார்.
இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்தி, பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். புகாரளிக்க வரும் பெண்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தி, சேலம் மாவட்ட துணைத்தலைவர் ராஜாத்தி, மாவட்ட துணைத்தலைவர் ராணி, மாவட்ட உதவி செயலாளர் பழனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.