/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்சாரம் தாக்கி மகன் பாதிப்பு நஷ்டஈடு கேட்டு தாய் மனு
/
மின்சாரம் தாக்கி மகன் பாதிப்பு நஷ்டஈடு கேட்டு தாய் மனு
மின்சாரம் தாக்கி மகன் பாதிப்பு நஷ்டஈடு கேட்டு தாய் மனு
மின்சாரம் தாக்கி மகன் பாதிப்பு நஷ்டஈடு கேட்டு தாய் மனு
ADDED : நவ 05, 2024 02:02 AM
மின்சாரம் தாக்கி மகன் பாதிப்பு
நஷ்டஈடு கேட்டு தாய் மனு
நாமக்கல், நவ. 5-
'மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்ட மகனுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பரமத்தி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த தாய் சுபாஷினி, 43, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான், என் கணவர் ராஜலிங்கம், மகன் அஜய்குமார், 20, ஆகியோருடன், பரமத்தி இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருகிறேன். என் மகன் அஜய்குமார், கடந்த, 10ல், பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினருடன், பிள்ளக்களத்துாருக்கு சென்றார். அங்குள்ள உறவினர் வீட்டு மாடிக்கு சென்றபோது, உயரழுத்த மின் கம்பி உரசி துாக்கி வீசப்பட்டார்.
அதில் படுகாயமடைந்த என் மகனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பந்தப்பட்ட உறவினர் வீட்டு மாடியில் தாழ்வாக உயரழுத்த மின் கம்பி சென்றதால், அதில் என் மகன் பாதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட என் மகனுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.