/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு துாண்டுதல் பயிற்சி முகாம்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு துாண்டுதல் பயிற்சி முகாம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு துாண்டுதல் பயிற்சி முகாம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு துாண்டுதல் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 24, 2025 01:41 AM
நாமக்கல் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், சேந்தமங்கலத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 'துாண்டுதல் பயிற்சி' முகாம் நடந்தது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையானது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீ விபத்து மற்றும் பிற பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பதை குறித்தும் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 'துாண்டுதல் பயிற்சி' முகாம் நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி தலைமை வகித்தார்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் தாரணி முன்னிலை வகித்தார். கொல்லிமலை தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் பூபதி பங்கேற்று, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து, வறட்சி, பஞ்சம், புயல் மற்றும் போர் போன்ற தலைப்புகளில் விளக்கியதுடன், செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.
மேலும், தீயை அணைப்பது, காயமடைந்தவர்களை மீட்பது மற்றும் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய செயல்முறைகள் பற்றியும் விளக்கினார். பயிற்சி முகாமில், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.