/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
/
சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : ஜூலை 22, 2025 02:09 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி பகுதியிலிருந்து கோரைக்காடு வழியாக மூலக்காடு செல்லும் சாலையில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், கட்டனாச்சம்பட்டி சாலையில், சில இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
மேலும், மழையின் போது சாலையில் பல இடங்களில் குட்டைபோல் மழைநீர் தேங்கி நிற்கிறது. அத்தருணத்தில் பஸ், கார் போன்ற வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும்போது சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தண்ணீரை தெளித்தவாறு செல்கிறது. மேலும், சாலையோரம் தேங்கி நிற்கும் மழை நீரால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், விபத்து ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் இருந்து கோரைக்காடு வழியாக மூலக்காடு செல்லும் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.