/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பை எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி
/
குப்பை எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 19, 2025 06:54 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., வழித்தடத்தில், பெரியகாடு பிரிவு பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இரவில் தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., வழித்தடத்தில் பெரியகாடு பிரிவு பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது மலை போல குவிந்து இருந்தது. இந்நிலையில் கழிவுகளுக்கு நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சிலர் தீ வைத்து விட்டனர். இதனால் மளமள-வென தீ எரிந்தது. குப்பை, பிளாஸ்டிக், தொழிற்சாலை கழிவுக-ளுக்கு தீ வைக்கப்பட்டதால், இரவு முழுவதும் புகைந்து கொண்டு இருந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்-டது. அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால வாகன ஓட்டிகளும், அருகில் வசிக்கும் மக்களும் அவதிப்பட்-டனர்.
இங்கு குப்பை, கழிவுகள் கொட்டுவோர் மீது அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.