/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை
/
புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை
புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை
புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை
ADDED : ஜூலை 13, 2024 08:30 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியனில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், பஞ்., வாரியாக நன்றி தெரிவித்து வருகிறார்.
அப்போது, ஏழுர் அகரம், தத்தாதிரிபுரம் ஆகிய பஞ்.,களில் காவிரி குடிநீர் முறையாக வருவ-தில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதைய-டுத்து, எம்.பி., மாதேஸ்வரன், குடிநீர் வாரிய உதவி செயற்பொறி-யாளர் அகிலாபானு, பி.டி.ஓ., முத்துலெட்சுமி, சுதா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில், முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்; குடிநீர் தொட்டிகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும்; குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது, ஆப்ரேட்டர்கள் உடனடி-யாக சரி செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது. கொ.ம.தே.க., மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.