sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6 வழித்தடங்களில் மகளிருக்கு கூடுதல் பஸ் வசதிஎம்.பி., ராஜேஸ்குமார் தொடங்கி வைப்பு

/

6 வழித்தடங்களில் மகளிருக்கு கூடுதல் பஸ் வசதிஎம்.பி., ராஜேஸ்குமார் தொடங்கி வைப்பு

6 வழித்தடங்களில் மகளிருக்கு கூடுதல் பஸ் வசதிஎம்.பி., ராஜேஸ்குமார் தொடங்கி வைப்பு

6 வழித்தடங்களில் மகளிருக்கு கூடுதல் பஸ் வசதிஎம்.பி., ராஜேஸ்குமார் தொடங்கி வைப்பு


ADDED : டிச 15, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 15-

நாமக்கல் நகரில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ப.வேலுார், ராசிபுரம், காட்டுப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழக எல்.எஸ்.எஸ்., டவுன் பவுஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நின்றும் செல்லும். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள, மகளிருக்கு கட்டணமில்லா சேவை இந்த பஸ்களில் கிடைக்காது. இதில் பயணம் செய்யும் பெண்கள் பணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும்.

இந்நிலையில், இந்த பஸ்களை தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு இலவசமாக இயக்க வேண்டும் என, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, 6 பஸ்களையும், எல்.எஸ்.எஸ்., டவுன் பஸ் என்பதை சாதாரண விடியல் பயணம் டவுன் பஸ்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, புதிய விடியல் பயண டவுன் பஸ்கள் துவக்க விழா, நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜேஸ்குமார், டவுன் பஸகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதவாது:

தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன், அரசு டவுன் பஸ்களில் மகளிர் விடியல் பயண திட்டம், கடந்த மே, 7 முதல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில், 72 சதவீதம் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், அரசு டவுன் பஸ்களில் மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு, 124 டவுன் பஸ்களில், 1,70,027 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த, 124 டவுன் பஸ்களுடன் கூடுதலாக, 6 பஸ்கள் சேர்த்து மொத்தம், 130 டவுன் பஸ்கள் மகளிருக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கத்தார் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தமிழக முதல்வர் அனுமதியுடன் தற்போது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் கத்தார் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்திட கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு முட்டை ஏற்றுமதி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us