sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முதல்வர், துணை முதல்வருக்கு எம்.பி., ராஜேஸ்குமார் நன்றி

/

முதல்வர், துணை முதல்வருக்கு எம்.பி., ராஜேஸ்குமார் நன்றி

முதல்வர், துணை முதல்வருக்கு எம்.பி., ராஜேஸ்குமார் நன்றி

முதல்வர், துணை முதல்வருக்கு எம்.பி., ராஜேஸ்குமார் நன்றி


ADDED : ஆக 14, 2025 02:22 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், 33 ஆண்டுகளுக்கு பின், புதிய மத்திய கூட்டுறவு வங்கியாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக அரசாணை பிறப்பித்த, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை, இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில், 30 ஆண்டுகளுக்கு பின், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாமக்கல் மாவட்ட மக்களின் கடன் தேவை, விவசாயிகளுக்கு கடன் வசதி வழங்கி, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சியையும், நாமக்கல் மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கடன் தேவைகளையும் பூர்த்தி செய்து, கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் பங்குபெற்று, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வளமான வாழ்வுக்கு துணை நிற்க வாழ்த்துகள்

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்:

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த வங்கி உருவாக, எம்.பி., ராஜேஸ்குமார் எடுத்த முயற்சிகளை நான் நன்கு அறிவேன். இந்த வங்கியை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பிரிக்க அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வங்கி சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள், நெசவாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிதி சேவைகள் அளித்து, நாமக்கல் மாவட்ட மக்களின் வளமான வாழ்வுக்கு துணை நிற்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி:- நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இன்று முதல் தனித்து செயல்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின், ஒரு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தமிழகத்தில் உதயமாகி உள்ளது. இந்த வங்கியின் பிரதான நோக்கம், உறுப்பினர் சங்கங்களை உயர்த்தி உயரும் வங்கி என்பதே.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி உதவும் வங்கி மற்றும் நிதி சமப்படுத்தும் வங்கியாக செயல்பட தொடங்கும் இந்த வங்கி, பல்வேறு கடன் உதவிகளை தன் கிளைகள் வாயிலாகவும், உறுப்பினர் சங்கங்கள் வாயிலாகவும் வழங்கி மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவிபுரிய என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் வரலாற்றில் மற்றொரு மணிமகுடம்

நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) அருளரசு:

'ஒருவர் அனைவருக்காக, அனைவரும் ஒருவருக்காக' என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கூட்டுறவு இயக்கத்தின், நாமக்கல் வரலாற்றில் மற்றொரு மணிமகுடம் தான் இன்று உதயமாகி உள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

தமிழகத்தில், 24-வது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக தன் நிதி சேவைகளை தொடங்கும் இந்த வங்கி, பலதரப்பட்ட மக்களிடம் வைப்புகள் பெற்றும், கடன்கள் வழங்கியும் உறுப்பினர் சங்கங்களை உயர்த்தி தானும் உயர வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளரும், மேலாண் இயக்குனருமான யசோதாதேவி:

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த வங்கி உருவாக பெரும் முயற்சி மேற்கொண்டு அயராது பாடுபட்ட எம்.பி., ராஜேஸ்குமாருக்கும், கூட்டுறவுதுறை அமைச்சர், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வங்கி சிறப்பாக செயல்பட்டு, விவசாயிகள், நெசவாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிதி சேவை அளித்து, நாமக்கல் மாவட்ட மக்களின் வளமான வாழ்வுக்கு துணை நிற்க வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us