/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் விரைவில் 'மினி டைடல் பார்க்' எம்.பி., ராஜேஸ்குமார் திட்டவட்டம்
/
ராசிபுரத்தில் விரைவில் 'மினி டைடல் பார்க்' எம்.பி., ராஜேஸ்குமார் திட்டவட்டம்
ராசிபுரத்தில் விரைவில் 'மினி டைடல் பார்க்' எம்.பி., ராஜேஸ்குமார் திட்டவட்டம்
ராசிபுரத்தில் விரைவில் 'மினி டைடல் பார்க்' எம்.பி., ராஜேஸ்குமார் திட்டவட்டம்
ADDED : அக் 30, 2024 01:09 AM
ராசிபுரத்தில் விரைவில் 'மினி டைடல் பார்க்'
எம்.பி., ராஜேஸ்குமார் திட்டவட்டம்
நாமக்கல், அக். 30-
நாமக்கல் மாவட்ட தொழில் மையம் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தொழில் கடன் உதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
எம்.பி., மாதேஸ்வரன், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 34 தொழில் முனைவோருக்கு, 22.45 கோடி ரூபாய் மதிப்பில், தொழில் கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் நிலவும் தொழில் துறைக்கு உகந்த சூழல், உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள் மற்றும் வணிக ரீதியான வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோருக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. 2023-24ம் நிதியாண்டில், 2.27 கோடி ரூபாய் அரசு மானியத்துடன், 21.39 கோடி ரூபாய் தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2024-25ல், இதுவரை, இரண்டு கோடி ரூபாய் அரசு மானியத்துடன், 6.50 கோடி ரூபாய் தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கிட, 850 ஹெக்டேர் பரப்பளவில், 'சிப்காட்' தொழில் பூங்கா உருவாக்கிட இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்கப்படுவதால், நாமக்கல் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும்.
தமிழக முதல்வர் ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்க முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அனுமதியைப் பெற்று, ராசிபுரத்தில் 'மினி டைடல் பார்க்' அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை மேயர் பூபதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தலைவர் இளங்கோ, தாட்கோ மேலாளர் ராமசாமி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.