/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பு தடை விதிக்க கேரள கவர்னரிடம் எம்.பி., கோரிக்கை

ADDED : ஜன 19, 2025 07:03 AM
நாமக்கல்: 'கேரளாவில், தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும்' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், அம்மாநில கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்-துள்ளார்.
மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில், லோக்சபா நிலைக்குழு கூட்டம், நேற்று முன்தினம் கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்தது. நாமக்கல் லோக்-சபா தொகுதி கொ.ம.தே.க., - எம்.பி., மாதேஸ்வரன், அக்கூட்-டத்தில் கலந்துகொண்டார். அங்கு, கேரளா கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டை ஏற்றிச்செல்லும் லாரிகளை, கேரளா மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகா-ரிகள், உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்குப்பதிவு செய்து தொல்லை செய்கின்றனர்.இதை கைவிட வேண்டும். மேலும், கேரளா மருத்துவ கழிவு-களை, தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தடை செய்ய வேண்டும். கேரளா மாநிலத்தில் ஓடிக்கொண்டி-ருக்கும், தமிழக காஸ் டேங்கர் லாரிகளுக்கு, போலீசார் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர்.அதில் தவறு நடக்கிறது. அபராதம் விதிக்கும்போது, சம்பந்தப்-பட்ட லாரி டிரைவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். கேரளா மாநிலத்தில் வசிக்கும், கொங்கு வேளாளர் சமூகத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.