ADDED : பிப் 23, 2024 01:45 AM
நாமகிரிப்பேட்டை;சீராப்பள்ளி டவுன் பஞ்.,ல், 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுாலகத்திற்கு கட்டடம் கட்ட, எம்.பி., ராஜேஸ்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்.,ல், 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக, கஸ்பா தெருவில் நுாலகம் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நுாலகத்தின் மேற்கூரை சிமெனட் பூச்சு விழுந்தது. இதனால், நுாலகத்தை தற்காலிகமாக வேறு கட்டடத்திற்கு மாற்றினர். பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக, 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் பணியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, சப்கலெக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட நுால் அதிகாரி தேன்மொழி, டவுன் பஞ்., தலைவர் லோகாம்பாள், துணைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.