/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போடிநாய்க்கன்பட்டியில் மண் லாரிகள் சிறைபிடிப்பு
/
போடிநாய்க்கன்பட்டியில் மண் லாரிகள் சிறைபிடிப்பு
ADDED : ஜூலை 19, 2025 01:48 AM
எருமப்பட்டி:போடிநாய்க்கன்பட்டியில் அதிவேகமாக மண் கொண்டுசெல்லும் லாரிகளால் விபத்து நடப்பதாக கூறி மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர்.
எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சிவநாய்க்கன்பட்டி, கோம்பை, அலங்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏழை மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில், கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து மண் கொண்டுசெல்லும் லாரிகள் அதிகளவில் செல்வதால், மாணவ, மாணவியர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை கண்டித்து, நேற்று காலை போடிநாய்க்கன்பட்டி அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மண் கொண்டு செல்லும் லாரிகளை சிறை பிடித்தனர். இதனால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, போடிநாய்க்கன்பட்டி மக்கள் கூறியதாவது: இப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் மண் லாரிகள் அதிவேகமாக செல்கிறது. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, பள்ளி நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி மண் லாரிகள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.