/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு அதிகாரிகளுடன் நகராட்சி தலைவர் ஆலோசனை
/
அரசு அதிகாரிகளுடன் நகராட்சி தலைவர் ஆலோசனை
ADDED : டிச 22, 2024 01:20 AM
பள்ளிப்பாளையம், டிச. 22-
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் மந்தகதியில் நடந்து வரும் குடிநீர், சாலை பணிகளை, விரைவாக முடிப்பது குறித்து அதிகாரிகளுடன், நகராட்சி தலைவர் ஆலோசனை நடத்தினார்.
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் தார் சாலை, கான்கிரீட் சாலை, மற்றும் அம்ருத் திட்டத்தில் குடிநீர் திட்டப்பணி, சேதமடைந்த சாலையில் பேட்ச் ஒர்க் பணி பல இடங்களில் மந்தகதியில் நடந்து வருகிறது.
இது குறித்து நகராட்சி தலைவர் செல்வராஜுக்கு புகார் சென்றது. நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், மந்தகதியில் நடக்கும் பணிகளை, கூடுதலாக பணியாளர்களை அமர்த்தி விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நகராட்சி கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.