/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலவச வீட்டுமனை கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
இலவச வீட்டுமனை கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 25, 2025 02:00 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம் குளத்துவலவில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, இலவச வீட்டு நிலம், 'கலைஞர் கனவு இல்லம்' வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இலுப்புலி கிராம நிர்வாக அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சியின் கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, இலுப்புலி கிராமம், குளத்துவலவு அருந்ததியர் தெருவில், 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குடியிருப்பு அருேக, இலுப்புலி ஏரி, 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, மண் சுவர் பாதிக்கப்படுகிறது. சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து, சேறும் சகதியுமாக, குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் குளத்துவலவு பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை, வேறு இடத்தில் வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

