/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை அமைக்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
சாலை அமைக்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : மே 29, 2025 01:50 AM
நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., 1வது வார்டு வெள்ளக்கல்பட்டி, அம்பேத்கர் நகர், காமராஜர் நகர் பகுதிக்கு கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில், டவுன் பஞ்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது,
வெள்ளக்கல்பட்டி கிராமம், அம்பேத்கர் நகரில், 2015ல் கான்கிரீட் சாலை அமைக்க, ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். இதை அப்பகுதி சேர்ந்த சமூக விரோதிகள் சிலர் தடுத்துவிட்டனர். அதேபோல், 2020ல், ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிய போதும், சிலர் சாலை அமைக்கவிடாமல் தடுத்தனர். மீண்டும், 14வது நிதிக்குழு மானிய திட்டத்தில், ஒரு கோடி ரூபாயில் சாலை அமைக்க முயன்றபோதும் தடுத்துவிட்டனர். இதை கண்டித்து கோஷமிட்டனர்.
டவுன் பஞ்., துணைத்
தலைவர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், சாலை அமைக்கும்போது இடையூறு ஏற்படுத்தினால், போலீசார் உதவியோடு சாலை அமைக்கப்படும் என்றும், சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.