/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு
/
பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு
பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு
பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 26, 2025 04:25 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி கமிஷனர் கணேசன், தெருக்களில் உள்ள வீடுகளில் உள்ள கேரி பேக்குகள் சேகரிப்பு பணி, நேற்று காலை நடந்தது. வீதிகள், சாலைகளில் கிடந்த கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பைகளை அகற்றினர். முன்னதாக நகராட்சி அலுவல-கத்தில் துாய்மை பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் நெகி-ழிகள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில், கேரி பேக்குகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்-சூழல் பாதிப்பு, உடல்நலக்குறை ஆகிவை குறித்தும், கேரி பேக்-குகளுக்கு பதில், பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துாய்மை அலுவலர் செல்வராஜ், துாய்மை ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் துாய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.