/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கூடுதல் வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் கைது செய்ய வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பு
/
அரசு கூடுதல் வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் கைது செய்ய வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பு
அரசு கூடுதல் வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் கைது செய்ய வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பு
அரசு கூடுதல் வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் கைது செய்ய வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பு
ADDED : மார் 16, 2024 07:28 AM
நாமக்கல் : ''அரசு கூடுதல் வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் வரை, நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர்
அய்யாவு கூறினார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன்; நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்கத்தில் உறுப்பினர். மேலும், அரசு கூடுதல் வக்கீலாகவும் பணியாற்றுகிறார். இவரது மகன் அகிலன்; இவரும் வக்கீலாக பணியாற்றி வருகிறார். கடந்த, 13ல் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், பொருட்களை சேதப்படுத்தியது. அப்போது அங்கு வந்த வக்கீல்கள் அறிவழகன், அகிலன் ஆகியோரை, மர்ம கும்பல் கடுமையாக தாக்கினர். இதுகுறித்து, எருமப்பட்டி போலீசில் அளித்த புகார்படி, 10 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் அய்யாவு தலைமையில், நேற்று முன்தினம் வக்கீல்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளாக நேற்றும், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் அய்யாவு கூறுகையில், ''வக்கீல் அறிவழகனை தாக்கியவர்களை, போலீசார் கைது செய்யாமல் வெளியே அனுப்பிவிட்டனர். இது தொடர்பாக, எஸ்.பி., ராஜேஷ்கண்ணனிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரியும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குற்றவாளிகளை கைது செய்யும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்,'' என்றார்.

