/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தனம்பாளையத்திற்கு அடிப்படை வசதி தேவை
/
முத்தனம்பாளையத்திற்கு அடிப்படை வசதி தேவை
ADDED : செப் 09, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், எஸ்.நாட்டாமங்கலம் பஞ்.,ல் முத்தனம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, கடந்த, 8 ஆண்டுக்கு முன், தமிழக அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதில், பட்டா வாங்கிய பயனாளிகள், வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில், இந்த கிராமத்தில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இலவச பட்ட வழங்கிய பகுதிக்கு, அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.