/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மர்ம விலங்கு அட்டகாசம்: மாதிரிகள் சேகரிப்
/
மர்ம விலங்கு அட்டகாசம்: மாதிரிகள் சேகரிப்
ADDED : ஜன 01, 2025 01:36 AM
பு
சேந்தமங்கலம், ஜன. 1-
கொல்லிமலையில், கடந்த வாரம் மர்ம விலங்கு கடித்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகளை கடித்து குதறிய விலங்கு சிறுத்தை புலி என, விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொல்லிமலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர், 'டிராக் கேமரா' பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வெள்ளக்குழிப்பட்டி என்ற மலை கிராமத்தில் விஜயகுமார், ராஜேந்திரன், அன்பரசு ஆகியோரது ஆட்டுப்பட்டிகளில், 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.
இதில், அனைத்து ஆடுகளும் உயிரிழந்த நிலையில், நாமக்கல் வன அலுவலர் கலாநிதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பழனிவேல் மற்றும் அதிகாரிகள், உயிரிழந்த கால்நடைகளை ஆய்வு செய்தனர். மேலும், உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள உயர்நிலை வன பாதுகாப்பு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.

