/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடுகளை மட்டும் வேட்டையாடும் மர்ம விலங்கு; வனத்துறை குழப்பம்
/
ஆடுகளை மட்டும் வேட்டையாடும் மர்ம விலங்கு; வனத்துறை குழப்பம்
ஆடுகளை மட்டும் வேட்டையாடும் மர்ம விலங்கு; வனத்துறை குழப்பம்
ஆடுகளை மட்டும் வேட்டையாடும் மர்ம விலங்கு; வனத்துறை குழப்பம்
ADDED : ஜன 03, 2025 01:12 AM
சேந்தமங்கலம், ஜன. 3-
கொல்லிமலையில், ஆடுகளை மட்டும் வேட்டையாடும் மர்ம விலங்கால் வனத்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
கொல்லிமலையில், 200க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாங்கள் வளர்க்கும் பன்றி, எருமை, பசு உள்ளிட்ட கால்நடைகளை, ஊருக்கு வெளிபுறம் உள்ள பகுதியில் தொழுவம் அமைத்து கட்டி வைத்துள்ளனர். இதேபோல், இந்த இடத்தில் பட்டி அமைத்து இரவு நேரங்களில் ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த, 10 நாட்களாக பட்டிகளில் அடைத்து வைத்துள்ள ஆடுகளை, மர்ம விலங்கு கடித்து வருகிறது. இதுவரை, 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர், 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர். ஆனால் மர்ம விலங்கு கேமரா இல்லாத பகுதியில் சென்று, ஆடுகளை கடித்து வருகிறது.
மேலும் ஆடுகள் கட்டியுள்ள இடத்தில், எருமை, பன்றி உள்ளிட்டவை உள்ள நிலையில், மர்ம விலங்கு ஆடுகளை மட்டும் குறி வைத்து வேட்டையாடி வருவதால், வனத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.