/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லுாரி மாணவி மர்ம மரணம்:நாமக்கல் போலீசார் விசாரணை
/
கல்லுாரி மாணவி மர்ம மரணம்:நாமக்கல் போலீசார் விசாரணை
கல்லுாரி மாணவி மர்ம மரணம்:நாமக்கல் போலீசார் விசாரணை
கல்லுாரி மாணவி மர்ம மரணம்:நாமக்கல் போலீசார் விசாரணை
ADDED : ஆக 21, 2024 02:14 AM
நாமக்கல்;கொல்லிமலை, எடக்கல்பட்டியை சேர்ந்வர் ராஜூ மகள் பானுப்பிரியா, 24. இவர், நாமக்கல்- - திருச்சி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனியில், ராமசாமி என்பவர் வீட்டில், இரண்டு ஆண்டுகளாக வாடகைக்கு தங்கி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், பி.எஸ்சி., கணிதம், இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இவர், 4 ஆண்டுகளுக்கு முன், கொல்லிமலை வாசலுார்பட்டியை சேர்ந்த ரவி என்பவரை திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருவரும் பிரிந்து விட்டனர். விவாகரத்து வழக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பானுப்பிரியா தங்கி இருந்த வாடகை வீட்டில், நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது முகம், கைகளில் லேசான காயம் இருந்தது. நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், நாமக்கல்லை சேர்ந்த வாலிபர் ஒருவரும், பானுப்பிரியாவும் காதலித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் அந்த வாலிபர் பானுப்பிரியா தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சென்றதும், அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.