தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பா.ம.க., நிர்வாகியை தாக்கிய மர்ம கும்பல்

பா.ம.க., நிர்வாகியை தாக்கிய மர்ம கும்பல்

பா.ம.க., நிர்வாகியை தாக்கிய மர்ம கும்பல்


ADDED : பிப் 27, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்; ப.வேலுாரில், தேர்தல் பிரசாரம் முன் விரோதம் காரணமாக, பா.ம.க., நிர்வாகியை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலானதையடுத்து, மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் குழந்-தைவேல், 40, லேத் பட்டறை வைத்துள்ளார். இவர் ப.வேலுார், 17 வது வார்டு பா.ம.க., கிளை நிர்வாகியாக உள்ளார். கடந்த சில தினங்களாக, தனது பகுதியில் தெருமுனை பிரசாரம் மேற்-கொண்டு வந்துள்ளார். இதனால் குழந்தைவே-லுக்கும், மாற்று கட்சியினருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம், பழைய பைபாஸ் சாலையில் உள்ள குழந்தைவேலுக்கு சொந்த-மான லேத் பட்டறையில் புகுந்த, மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்த பொருட்-களை சேதப்படுத்தினர். அருகில் இருந்தவர்கள் குழந்தைவேலுவை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தைவேல் தாக்கப்பட்டது, அங்கிருந்த கண்-காணிப்பு கேமராவில் வீடியோவாக வைரலான-தையடுத்து, ப.வேலுார் போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us