/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் வெடித்த மர்ம பொருள்
/
பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் வெடித்த மர்ம பொருள்
ADDED : பிப் 17, 2025 03:21 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் டீக்கடையில் அதிகாலையில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில், பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்த, தந்தை மற்றும் மகள் பலத்த காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கவின் கர்ணன், 34, என்பவர் டீக்கடை நடத்தி வரு-கிறார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கடைக்குள் இருந்த மர்-மப்பொருள் வெடித்து சிதறியது. இதில் கடையில் இருந்த பொருட்கள், இரும்பு ஷட்டரை பிய்த்துக்கொண்டு, 50 அடி துாரத்துக்கு துாக்கி வீசப்பட்டன.
அப்போது கடை முன் பஸ்சுக்காக, திருச்செங்கோட்டை சேர்ந்த ஜனனி, 21, அவரது தந்தை விஜயகுமார், 54, நின்று கொண்டிருந்-தனர். வெடித்து சிதறிய பொருட்கள் பட்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் தனித்-தனியே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்செங்கோடு போலீசார் அப்பகுதி 'சிசிடிவி' கேமராவில் பதி-வான காட்சிகளை ஆய்வு செய்தும், கடையிலும் சோதனை நடத்-தினர்.
இதில் கடையில் இருந்த சிலிண்டர் வெடிக்காமல் இருந்தது தெரிய வந்தது. இதனால் வெடித்த பொருள் எதுவென்று தெரிய-வில்லை. அதேசமயம் பொருட்கள் சிதறியதை பார்க்கும்போது, 'ஜெலட்டின்' போன்ற சக்திவாய்ந்த வெடிபொருளாக இருக்-கலாம் என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸ் தரப்-பிலோ எதுவும் கூறாமல், மர்ம பொருள் என்று கூறி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொருட்கள் பட்டதில் காயமடைந்த ஜனினி, நர்சிங் பயிற்சி முடித்துள்ளார். ஈரோட்டில் இன்று பணியில் சேர்வதற்காக பஸ்-சுக்காக காத்திருந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக டீக்கடைக்காரர் கவின்
கர்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

