/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் 12ல் பால் அபிஷேகம்
/
மாரியம்மன் கோவிலில் 12ல் பால் அபிஷேகம்
ADDED : ஆக 11, 2011 03:49 AM
மோகனூர் :வாழவந்தி மாரியம்மன் கோவிலில், ஆகஸ்ட் 12ல் பால்குட அபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.
மோகனூர் யூனியன், எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி நான்காம் வெள்ளிக்கிழமை அன்று ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 14ம் ஆண்டு பால்குட அபிஷேக விழா, ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கிறது.விழாவை முன்னிட்டு, அன்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குமாரபாளையம் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடுகின்றனர். பின்னர், பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து ஊர்வலமாக வரும் பக்தர்கள் கோவிலை வந்தடைகின்றனர்.தொடர்ந்து, ஸ்வாமிக்கு பால்குட அபிஷேகம் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பதினெட்டுபட்டி கிராம மக்கள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.