/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரத்தில் மின்கோபுரம் அமைக்க கலெக்டரிடம் மனு
/
சாலையோரத்தில் மின்கோபுரம் அமைக்க கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 11, 2011 03:49 AM
பள்ளிபாளையம்: 'பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே சாலையின் நடுவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது. அந்த மின்கோபுரத்தை சாலையோரத்தில் அமைத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் தங்கராசு, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட விபரம்:
பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப், குறுகிய சாலையில் அமைந்துள்ளது. அங்கு, நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. அந்த பகுதியில் மின்கோபுரம், ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் முயற்சித்தனர். அவ்வாறு அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்துவிட வாய்ப்புகள் அதிகம். எனவே, அப்பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டாம். சாலையோரத்தில் அந்த மின்கோபுரம் அமைக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சம்மந்தப்பட்ட சாலையில் மின்கோபுரம், ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அதனால், நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, அப்பகுதியில் போலீஸ் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதன் மீது லாரி மோதியதில், அந்த நிழற்குடை சிதிலமடைந்தது. இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, உயர்மின் கோபுரத்தை சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.