/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனுமதிக்கப்பட்ட உரங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்: கலெக்டர்
/
அனுமதிக்கப்பட்ட உரங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதிக்கப்பட்ட உரங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதிக்கப்பட்ட உரங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்: கலெக்டர்
ADDED : ஆக 11, 2011 11:58 PM
நாமக்கல்: 'அனுமதிக்கப்பட்ட உரங்களை மட்டுமே உர விற்பனை இடங்களில் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உரக்கட்டுப்பாட்டு விதியின்படி, உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட உரங்களை மட்டுமே அனுமதிக்கப்பட்ட உர விற்பனை இடங்களில் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு விற்பனைக்கும், தவறாமல் ரசீது தர வேண்டும். விற்பனை ரசீதுகளில் விற்பனை நிலையத்தின் பெயர், ஊர், உரிமத்தின் எண் மற்றும் ரசீது எண் போன்ற விபரங்களை தெளிவாக அச்சடிக்கப்பட வேண்டும்.
உரம் விற்பனை செய்யும் தேதி, விவசாயிகளின் பெயர் மற்றும் முகவரியின்றி விற்பனை செய்தால், கடும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். மேலும், ரசீதுகளில் விவசாயிகளின் கையொப்பம் தவறாமல் பெறப்பட வேண்டும். உர மூட்டைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் விற்பனை செய்யப்படும் அனைத்து உரங்களின் இருப்பு நிலை, அவற்றின் விற்பனை விலை ஆகியவற்றைத் தவறாமல் ஒவ்வொரு நாளும் தெளிவாக எழுதி, கடைகளின் முன் வைக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உரம் கிடைக்க, தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான அடிப்படையில், உரங்கள் துறை பரிந்துரையின்படி வழங்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதில் சட்ட விதிமுறைகள் காணப்பட்டால், விற்பனையாளர்கள் மீது உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.